• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா உடல் தகனம்

திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. இறுதி ஊர்வலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் திருமகன் ஈவெரா (46). இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மூத்த மகன் ஆவார். இவருக்கு பூர்ணிமா என்ற மனைவியும், சமணா என்ற மகளும் உள்ளனர். திருமகன் ஈவெரா கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள குடியரசு இல்லமான தனது வீட்டில் தங்கி இருந்து தொகுதி பணிகளை செய்து வந்தார். தொகுதி தொடர்பான பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளை நேரில் சந்தித்து நிறைவேற்றி வந்தார். காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி மாற்று கட்சியினர் மற்றும் பொதுமக்களுடன் எளிமையாக பழகி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்த திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. ஈரோட்டில் உள்ள தனது வீட்டில் தங்கி வழக்கம்போல் தொகுதி பணிகளை செய்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதற்காக தனது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.வுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும் மாரடைப்பும் ஏற்பட்டது. இதையடுத்து அவருடன் இருந்தவர்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடல் கச்சேரி வீதியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. இறந்த தகவல் கிடைத்ததும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், மாற்று கட்சியினர், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. இறந்த தகவல் கிடைத்ததும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னையில் இருந்து தனது குடும்பத்துடன் ஈரோட்டுக்கு வந்தார். அங்கு தனது மகனின் உடலை பார்த்து இளங்கோவன் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதைப்பார்த்த அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களும் கதறி அழுதனர்.


இன்று அஞ்சலி செலுத்திய முக்கிய தலைவர்கள்
சட்டமன்ற தலைவர் அய்யாவு, கார்த்திக் சிதம்பரம், மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, மேட்டூர் தொகுதி எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ், ஜோதிமணி. செல்வ பெருந்தகை செல்வகுமார், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கே வி தங்கபாலு, ஜி கே வாசன் ஆகியோர் இன்று கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
பகல் ஒரு மணிக்கு ( கச்சேரி வீதி இ வி கே இளங்கோவன் குடியரசு இல்லத்தில் இறுதி சடங்குகள் நடந்து அங்கிருந்து தொடங்கி பன்னீர்செல் பூங்கா, மணிக்கூண்டு, காவேரி ரோடு வழியாக திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடல் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மின்மயானத்திற்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிற்பகலில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு ஆத்மாவில் அனைத்து கட்சி கூட்டமும் சேர்ந்து இரங்கல் கூட்டம் நடத்தினர்.
திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலுக்கு ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பல்வேறு கட்சியினர், பொதுமக்களும் வழிநெடுக மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.