ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அம்மா மக்கள் முன்னேற்ற க ழக வேட்பாளரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விறுவிறுப்படைந்துள்ளநிலையில் திமுக கூட்டணி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு பிரச்சாரப்பணிகளை துவங்கியுள்ளனர். அதேபோல அதிமுக தனது வேட்பாளரை 30 தேதி அறிவிக்கும்என தெரிகிறது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன், கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தினார் . கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவ பிரசாத் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.
வேட்பாளர் பற்றிய தகவல்கள்.
வேட்பாளர் A.M.சிவ பிரஷாந்த் பொறியியல் பட்டதாரிஆவார் .இவரது தந்தை சம்பத் (எ) S.A.முத்துக்குமரன் வழக்கறிஞர்.இவரது மனைவி கீர்த்தனா மருத்துவம் படித்தவர்.வேட்பாளர் A.M.சிவ பிரஷாந்த் ஈரோடு கிழக்கு மாவட்ட கழக செயலாளராக உள்ளார்.ஈரோடு மாநகர் மாவட்ட கழகத்தின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவராக 2017 முதல் பணியாற்றியுள்ளார். பின்னர் 2018 ஆம் ஆண்டு இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை என அணி இரண்டாக பிரிந்தபொழுது மாவட்ட இளைஞர் பாசறை தலைவராக பொறுப்பேற்றார். அதனைத் தொடந்து 2020 ஆம் ஆண்டு மாநில தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு துணை செயலாளராக நியமிக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டு ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளராக நியமிக்கப்பட்டு திறம்பட செயல் ஆற்றி வருகிறார்.
கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட இவர் மாவட்ட அளவில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த போட்டியாளர், ஆட்டநாயகன் ,கல்லூரி அளவில் நடந்த போட்டிகளில் சிறந்த கேப்டன் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது