• Fri. Apr 26th, 2024

லாரி ஓட்டுனரிடம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

நாகர்கோயிலில் வாகன சோதனையின் போது லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. உத்தவிட்டுள்ளார்.
நாகர்கோவிலில் இரவு நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் வாகன சோதனை நடைபெறுவது வழக்கம்..கனிம வளம் ஏற்றிசென்ற லாரி ஓட்டுனரிடம் உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கியதாக தெரியவந்துள்ளது.லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம். எஸ்.பி உத்தரவுவிட்டுள்ளார்.. சோதனைச் சாவடிகளிலும் நெடுஞ்சாலை ரோந்து பணியிலும் தினமும் லட்சக்கணக்கான பணம் லஞ்சமாக பெறப்படுகிறது.இது தவிர மாதம் தோறும் லாரி உரிமையாளர்களிடமிருந்து பெருந்தொகை ஒரு சில காவல் நிலைய ஆய்வாளர்,உதவி ஆய்வாளர், போலீசாருக்கு கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இருந்தும் சோதனை என்ற பெயரில் காவல்கிணறு முதல் களியக்காவிளை வரை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து போலீசார் பணம் பெற்று வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீஸாரால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறதே தவிர எந்த பலனும் இல்லை என்பதே உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *