உதகையில் இயங்கி வரும் சர்வதேச தனியர் மருந்தாக்கியல் கல்லூரியில் ஆடல், பாடலுடன் சமத்துவ பொங்கலை விமர்சையாக கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை கடந்த மாதம் 15 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.இதனைத் தொடர்ந்து கல்லூரி விடுமுறைக்கு பின் உதகையில் இயங்கி வரும் சர்வதேச தனியர் மருந்தாக்கியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரி முதல்வர் தனபால் தலைமையில் வெகு விமர்சையாக இன்று கொண்டாடப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.பின்னர் தமிழர்களின் பாரம்பரிய பாடல்களுக்கு மாணவ மாணவிகள் நடனமாடி உற்சாகமடைந்தனர்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)