பொங்கல் திருநாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக முழுவதும் பள்ளிகள்,கல்லூரிகள், நீதிமன்றங்கள், ஆட்சியர் அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் கலெக்டர் மனைவி நடனம் ஆடி அசத்தினார். இவ்விழாவில் கலெக்டர் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.