• Sat. Apr 20th, 2024

அதிக கட்டண புகார் இல்லாமல் பேருந்துகள் இயக்கம்- அமைச்சர் பேட்டி

Byஜெ.துரை

Jan 14, 2023

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பொங்கல் பண்டிகைக்கு இந்த முறை ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டண புகார் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ் .சிவசங்ககர் பேட்டியளித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது .இந்த சிறப்பு பேருந்துகளின் செயல்பாடுகள் குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் சென்னை கோயம்பேட்டில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்
பின்னர் சிறப்பு பேருந்துகாக அமைக்கப்பட்ட விசாரணை மையம் மற்றும் அதிகாரிகளுடன் செயல்பாடுகள் குறித்து கேட்டு அறிந்தார்.மேலும் சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடிய பயணிகளிடம் நேரடியாக சென்று பேருந்துகளின் இயக்கம் குறித்து விசாரித்தார்.தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் :
பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னையிலிருந்து மாதவரம் பேருந்து நிலையம் கலைஞர் கருணாநிதி நகர் தேர்தல் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் தாம்பரம் ரயில் நிலையம் பேருந்து நிலையம் பூந்தமல்லி பைபாஸ் பெயர் புரட்சித்தலைவி டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.நேற்றைய தினம் சென்னையில் இருந்து சராசரியாக இயக்கக்கூடிய 2100 பேருந்துகளுடன் 586 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட அதன் மூலம் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 300 பயணிகள் பயணம் செய்துள்ளனர்
இன்று மாலை 7 மணி நிலவரப்படி 1544 பேருந்துகளும் 1855 சிறப்பு பேருந்துகளில் 904 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 192 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.மொத்தமாக 12 13 ஆகிய இரண்டு தேதிகளில் 5134 பேருந்துகள் இயக்கப்பட்டு 2 லட்சத்து 66 ஆயிரத்து 492 பயணிகள் பயணம் செய்துள்ளனர்
நாளை தினசரி 20100 பேருந்துகளுடன் 1943 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.கடந்த ஆண்டு பொங்கல் மற்றும் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை விட 1949 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கு 16 முதல் 18 தேதி வரை தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் சேர்த்து நான்காயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.எந்த ஆண்டும் இல்லாத மாதிரி இந்த ஆண்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஜெயங்கொண்டம் அரியலூர் செல்வதற்கு முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், பொங்கல் விடுமுறை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் புகார் குறித்து 95 பேருந்து உரிமையாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவற்றில் ஒன்பது பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.இந்த முறை அதிக புகார் கட்டணம் எதுவும் வராமல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.சென்னையில் இரவு நேரங்களில் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட சென்னை ஆப் செயலி மூலம் முன்பதிவு செய்து விரைவு பேருந்து எஸ்இடிசி பேருந்து மூலம் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் எந்த இடத்தில் பயணிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் விதமாக லிங்க் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *