டெல்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துக் கொள்ள அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி20 மாநாட்டின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இபிஎஸ்க்கு அழைப்பு
