• Thu. Oct 1st, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தமிழக முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு…

BySeenu

Sep 30, 2026

தாராபுரம் இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள கோவை வந்த தமிழக முதல்வர் விஜய்க்கு தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் விஜய் முதலமைச்சர் ஆன பிறகு முதல் முறையாக சென்னையில் இருந்து தனி விமான மூலம் கோவை வந்தடைந்தார்.

அதனைத் தொடர்ந்து விஐபி நுழைவாயில் பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி மாவட்ட ஆட்சியர் அது அரசு அதிகாரியிடம் சில நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தி திடீரென்று சாலையில் சிறு தூரம் நடந்து சென்று பிரச்சார வாகனத்தில் ஏறி சென்றார்.சாலையில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு தொண்டர்கள் சாலையின் குறுக்கே வராதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் கோவை விமான நிலையத்தில் இருந்து சின்னியம்பாளையம், நீலாம்பூர், கணியூர், கருமத்தம்பட்டி, சோமனூர் காரணம்பேட்டை, பல்லடம் வழியாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு செல்கிறார். முதல்வர் ஆன பிறகு முதல் முறையாக கோவை வந்ததால் கோவை மட்டும் இல்லாமல் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும், முதல்வர் விஜய் பார்ப்பதற்கு ஆர்வமாக காலை முதலே கடும் வெயில் கூட பொருட்படுத்தாமல் நின்று கொண்டிருந்தனர்.
பொதுகூட்டத்தை முடித்துவிட்டு இரவு 7 மணிக்கு மீண்டும் தனி விமான மூலமாக சென்னை செல்வதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.