
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள இடையபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் ஜெசிந்தாஅன்புமொழி, தலைமை தாங்கினார் தலைமை ஆசிரியர் விக்டோரியா ராணி இடைநிலை ஆசிரியர் ஸ்டாலின் ராஜகுமார் முன்னிலை வகித்தனர் இதில் ஆட்டோவில் ஒலிபெருக்கி அமைத்து கிராம தெருக்கள் முழுவதும் உள்ள வீடுகள் தோறும் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதில் அரசு பள்ளியில் தங்கள் வீட்டில் உள்ள மாணவ, மாணவிகளை சேர்த்து படிக்க வைக்குமாறும் அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களை பெற தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டனர் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் துண்டு பிரசுரம்வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.

