• Thu. May 2nd, 2024

மதுரையில், எய்ம்ஸ் பணிகள் தொடக்கம்…

ByN.Ravi

Mar 7, 2024

தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இன்று முதல் கட்டுமான பணி தொடங்கும் என, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்த நிலையில், முதற்கட்ட பணியாக இடத்தினை சமன் செய்வதற்காக இரண்டு ஜேசிபிகளை கொண்டு சமன் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என, கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி மதுரையில் நடைபெற்ற விழாவில் அடிக்கல் நாட்டினார். 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 2023 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் துவங்காமல் இருந்து வந்தது.
எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருந்த தென் மாவட்ட மக்களுக்கு தற்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளுக்கான தனியார் கட்டுமான L&T நிறுவனம் சார்பில் முதற்கட்ட எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தினை சமன் செய்யும் வாஸ்து பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, ஓரிரு வாரங்களில் கட்டுமான பணிக்கான பூஜை தொடங்கும் என்றும், அதனைத் தொடர்ந்து கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு, 33 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 950 படுக்கைளுடன், பத்து தளங்களுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தென் தமிழக மக்களின் கனவு திட்டமான மதுரை எய்ம்ஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், கொரோனா மற்றும் ஜெய்கா நிதி நிறுவனம் சார்பாக தாமதமானது. இந்த நிலையில், கடந்தாண்டு கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்த பள்ளி கோரப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தியாவின் பிரபலமான கட்டுமான நிறுவனமான எல்.என்.டி. நிறுவனத்திடம் ஒப்பந்த புள்ளி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கட்டுமான பணிகளுக்கான முன் நடவடிக்கையாக அந்த இடத்தை சுத்தம் செய்வது மற்றும் நிலத்தை சமன் செய்வது போன்ற பணிகள் துவங்க உள்ளது.
இதில், முதல் கட்டமாக முதல் 18 மாதத்திற்குள் கல்லூரி வளாகம், மாணவர் விடுதி, வெளி நோயாளிகள் பிரிவு போன்ற முக்கிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு அதை த்
தொடர்ந்து, அடுத்த 15 மாதங்களில் மீதம் உள்ள கட்டிடங்கள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், முதல் கட்டமாக திட்ட அனுமதி, தீ பாதுகாப்பு ஒப்புதல், சுற்றுச்சூழல் அனுமதிகள் பெற்ற பிறகு கட்டுமான பணிகள் தொடங்கும் இடம் அதிலிருந்து 33 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் எனவும், எய்ம்ஸ் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று இரண்டு ஜேசிபி இயந்திரத்தை கொண்டு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி நடைபெற உள்ள இடத்தில் அனைத்து பகுதிகளும் சமன் செய்யும் பணி நடைபெற்று வருகிறது 222 ஏக்கர் பரப்பளவு கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் இரண்டு ஜேசிபி மற்றும் கொண்டு சமப்படுத்தும் பணி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *