திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் நவம்பர் 10, முத்தூரில் திமுக சார்பில் ரேக்ளா போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் 200 மீட்டர் 300 மீட்டர் தூரத்தில் ரேக்ளா போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் திண்டுக்கல், கோவை ,கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை,திருப்பூர், உடுமலை, தாராபுரம், கேரளாமாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான காளை மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு காளைகள் சீறிப் பாய்ந்து சென்று இலக்கை நோக்கி ஓடியது.
ரேக்ளா போட்டியில் காளைகள் சீறிபாய்ந்து சென்றதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த காளை மாடு ஜோடிக்கு 1 பவுன் தங்க காசும் இரண்டாவது இடத்தை பிடித்த மாடுஜோடிக்கு 3/4 பவுன் தங்க காசு மூன்றாம் பரிசாக 1/2 பவுன் தங்கமும் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கபட்டது.