• Fri. Oct 31st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்..,

ByPrabhu Sekar

Apr 30, 2025

ஜிஎஸ்டி சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக வணிக வளாகங்கள் மற்றும் உணவுகளின் எதிரே நிறுத்தப்படும் வாகனங்களும் அகற்றுவதற்கு போக்குவரத்து துறை காவலர்களிடம் அறிவுறுத்தப்படும் என பொது பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வா.வேலு பல்லாவரத்தில் பேட்டி,

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் ஜி எஸ் சி சாலை அதே போல் பல்லாவரத்தில் இருந்து திருநீர்மலை வழியாக குன்றத்தூர் செல்லும் சாலையை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வா.வேலு மற்றும் குறு சிறு நடுத்தர தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டனர்.

அப்பொழுது திருநீர்மலை குன்றத்தூர் செல்லும் சாலையை அமைச்சர் முன்னிலையில் அதிகாரிகள் மீட்டர் டேப் கொண்டு அளந்து பார்த்த போது சாலைகள் ஆக்கிரமிப்பு செய்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டன.

அதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் வேலு திருநீர்மலை சாலையிலிருந்து குன்றத்தூர் வரை செல்லும் சாலையில் ஆக்கிரமிப்பு இருப்பதாகவும், வருவாய்த்துறையினர் இடத்தை நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும் மேலும் இதற்கான அளவீடு பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் துரிதமாக செயல்பட்டு ஆக்கிரமங்களை அகற்றி போக்குவரத்துக்கு இடையூரு இல்லாமல் வாகனங்கள் செல்வதற்கு வழி வகுக்கப்படும் என தெரிவித்தார்

பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையிலிருந்து திருநீர்மலை குன்றத்தூர் நோக்கி செல்லும் சாலைகளை தனியார் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

குறிப்பாக 10 மீட்டர் கொண்ட சாலையை பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

ஒரு சில வருவாய் துறையினர் இடத்தை நெடுஞ்சாலை துறை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என்றும், மேலும் ஒரு சில இடங்களில் நில எடுப்பு எடுக்க வேண்டியது உள்ளது .

குறிப்பாக பல்லாவரம் குன்றத்தூர் சாலை அதிக அளவில் ஆக்கிரமிப்பு இருப்பதாகவும் ,நான்கு சாலை அமைப்பதற்கு திட்ட மதிப்பு செய்து இருப்பதாகவும், இது சம்பந்தமாக மாவட்டம் ஆட்சியரிடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஜிஎஸ்டி சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக வணிக வளாகங்கள் மற்றும் உணவுகளின் இதனை நிறுத்தப்படும் வாகனங்களும் அகற்றுவதற்கு போக்குவரத்து துறை காவலர்களிடம் அறிவுறுத்தப்படும் என தெரிவித்தார்.