புதுக்கோட்டை அருகே உள்ள ஏழுமுகக் காளியம்மன் கோவிலில் சிறப்புப் பூஜை. முத்தரையர் மன்னரின் 1351ஆவது சதய விழாவிற்காக நடத்தப் பட்டது.
டெல்டா மாவட்டம் முழுவதும் பெரும்பான்மையாக இருப்பது முத்தரையர்கள் என்ற வகையில்தான் பல்வேறு முன்னெடுப்புகள் முன் வைத்து எடுக்கப்படுகின்றன.

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறு சட்ட மன்றத் தொகுதிகளிலும் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பது இந்த இனத்தைச் சேர்ந்த வாக்காளர்களாக இருக்கிறார்கள். அதிலும் ஆலங்குடி சட்ட மன்றத் தொகுதிக்குள் எந்தக் கட்சி தங்களது வேட்பாளர்களை அறிவித்தாலும் முன்னாள் அமைச்சர் கே.வி.சுப்பையாவின் காலத்திற்குப் பிறகு முத்தரையர் இன வேட்பாளர்களை மட்டும்தான்.
ஆனால் ஆலங்குடி மட்டுமல்லாது ஆறு தொகுதிகளிலும் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்வது இந்த இன மக்கள்தான் என்பதை அரசியல்வாதிகள் உணர்ந்து வைத்திருப்பதால்தான் அவர்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

அதனால்தான் தமிழக அளவில் இருக்கும் முத்தரையர் இனம் சார்ந்த கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் எண்ணிக்கையில் சற்று அதிகமாக இருக்கும். அந்த வகையிலும்கூட திருக்கட்டளை கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் தொடங்கிய முத்தரையர் சிங்கப்படை என்ற அமைப்பு அண்மைக் காலத்தில் அரசியல் களத்திலும் சமூகத்திலும் பல்வேறு அரசியல் முன்னெடுப்புகளைச் செய்து வந்திருக்கிறது. அது முன்னாள் அமைச்சர் அ.வெங்கிடாசலம் குருபூஜை நிகழ்வுகள் ஆகட்டும், ஜல்லிக்கட்டு, வடமாடு நிகழ்வுகள், பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் பொருட்கள், இளைஞர்களை நல்வழிப்படுத்தி ஒரு சீரான பாதையில் வழி நடத்திச் செல்வதிலும் மற்ற அமைப்புகளைக் காட்டிலும் சற்று வேறு பட்டு வளர்ந்து வருகிறது.

அந்த வகையில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351ஆவது சதயவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி செல்லும் சாலையில் உள்ள ஏழுமுகக் காளியம்மன் சிலை அருகில் முத்தரையர் மன்னரின் கட் அவுட் வைத்து அதற்கு மலர்தூவி மரியாதை செய்ததுடன் இது எதற்காகச் செய்கிறோம் என்பதை விளக்கும் வண்ணம் புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கியப் பிரமுகர்களையும் வரவழைத்து அவர்களும் மலர்தூவி மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்வில் திமுகவின் மருத்துவர் அணியின் மாநில இணைச் செயலாளரான அண்ணாமலை ரகுபதி அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தார். இப்போதுள்ள புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர்; வை.முத்துராஜா மற்றும் கடந்த 15ஆண்டுகளாக திமுக அளவில் பேசப் பட்டு வரும் டாக்டர் சதீஷ் அவர்களும் கலந்து கொண்டு மாலை அணிவிpத்து மரியாதை செய்துள்ளனர்.
இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் இவர்கள் வந்து முத்தரையர் மன்னர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்துள்ள நிகழ்வுகள் மற்ற அனைவராலும் உற்று நோக்கப் படுகின்றன. ஆனாலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த இனத்தின் மீது வைத்திருந்த மரியாதையைத் தொடர்;து செய்யும் விதமாக அரசுப் பணியே வேண்டாம், நான் மற்றவர்களுக்குச் செய்யும் மருத்துவப் பணியே எனக்கு திருப்தியாக இருக்கிறது என்று தொடர்ந்து மருத்துவச் சேவையில் ஈடுபட்டு வரும் மருத்துவர் சதீஷ் உள்ளிட்ட அனைவருக்கும் முத்தரையர் சிங்கப்படையின் சார்பில் நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கப் பட்டன.





