• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்…

Byகாயத்ரி

Sep 10, 2022

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.27.50, இரண்டு மாதங்களில் 301 – 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 உயர்த்தப்பட உள்ளது.

அதே போல இரண்டு மாதங்களில் 501-600 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.155 உயர்த்தப்பட உள்ளது. இரண்டு மாதங்களில் 601 – 700 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.275 உயர்த்தப்பட உள்ளது. பொதுமக்கள் மத்தியில் கூடுதல் பொருளாதார சுமையை கொடுக்கும் இந்த மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.