• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேர்தல் தொடர்பான புகாரா..? இந்த எண்ணிற்கு போன் போடுங்க…

Byகாயத்ரி

Jan 28, 2022

ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆடி ஓய்ந்த பின் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது.பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான புகார் அளிக்க கட்டணிமில்லா தொலைப்பேசி தொடர்பு எண்களை மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 18004257072, 18004257073, 18004257074 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தேர்தல் விதிமீறல்கள், பணம் கொடுப்பது உள்ளிட்டவை தொடர்பாக புகார்களை பெற மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தின் தரைத்தளத்தில் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.