தமிழக தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு இபிஎஸ் தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நாளை மறுநாள் (1-ந்தேதி) சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கலந்து கொள்ள தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளது.
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழக முகவரிக்கு தேர்தல் ஆணையம் சார்பில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதன்படி தேர்தல் ஆணைய கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன், இன்பதுரை ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் அழைப்பான்து இபிஎஸ்தரப்புக்கு முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.