• Mon. Apr 21st, 2025

காட்டு யானை தாக்கியதில் முதியவர் படுகாயம்

காட்டு யானை தாக்கியதில் கூடலூர் பாண்டியார் குடோன் பகுதியை சேர்ந்த முதியவர் படுகாயம் அரசு மருத்துவமனையில் அனுமதிபட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ள நிலையில் இங்கு காட்டு யானைகள் மற்றும் புலிகள் சிறுத்தைகள் என அனைத்து விலங்குகளும் உள்ள பகுதியாகும்.
கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் தாக்குதலில் உயிர் சேதங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்நிலையில் இன்று கூடலூர் அருகே உள்ள பாண்டியார் டேன்டி குடோன் பகுதியை சேர்ந்த அகஸ்டின் 53 என்பவர் விறகு எடுக்க சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காட்டினுள் மறைந்திருந்த காட்டு யானை அகஸ்டினை தாக்கியதில் உடலில் பல இடங்களில் காயங்களுடன் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது கூடலூர் வனத்துறையினர் மற்றும் கூடலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.