• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இல்ல விழாவில் தாய்மாமன் ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் இரு சிறுமிகள் உள்பட 8 பெண்கள் படுகாயம்

ByP.Thangapandi

Jun 2, 2024

உசிலம்பட்டி அருகே இல்ல விழாவிற்கு சென்ற தாய்மாமன் ஊர்வலத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசு – பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் இரு சிறுமிகள் உள்பட 8 பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் மற்றும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்த பிரபுநாதன் என்பவரின் இல்ல விழா, மெய்யணம்பட்டி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த இல்லவிழாவிற்காக அன்னம்பாரிபட்டியிலிருந்து தாய்மாமனான வைரமுத்து என்பவரது தலைமையில் பட்டாசு வெடித்த வண்ணம் ஊர்வலமாக மண்டபத்திற்கு சென்றுள்ளனர்.

கருப்புக் கோவில் அருகில் இந்த ஊர்வலம் சென்று கொண்டிருந்த போது, பட்டாசு ஊர்வலத்திற்குள் வெடித்தில் ஊர்வலத்தில் வந்த இரு சிறுமிகள் உள்பட சத்யா, செல்வி, நித்யா, சானியா, பூங்கனி, திலகவதி, வைரசிலை என்ற 8 பேர் படுகாயமடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தாய்மாமன் ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த மற்றும் வெடித்தவுடன் பெண்கள் பதறி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார், இல்ல விழா நடத்தியவர்கள், பட்டாசு வெடித்தவர்கள் என 10க்கும் மேற்பட்டோரை காவல் நிலையம் அழைத்து வந்து இந்த விபத்து தொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.