

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா கார்மீது பாஜகவினர் முட்டை வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
கர்நாடக மாநிலகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதியில் வீரசாவர்க்கர் படத்துடன் பேனர் வைத்தது தவறு என கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பா.ஜனதாவினர், இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்து அவர் கர்நாடகாவில் கோணிகொப்பா, முர்நாடு பகுதியில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். சித்தராமையா அங்கிருந்து காரில் திதிமதி நகருக்குள் செல்ல முயன்றார். அப்போது சித்தராமையா கார் மீது முட்டை வீசப்பட்டது. மேலும், வீரசாவர்க்கர் புகைப்படங்களையும் சித்தராமையாவின் காரில் போராட்டக்காரர்கள் வீசினார்கள். இந்த சம்பவங்களால் அந்தப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் நிலவியது.
