• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சமையல் எண்ணெய் லிட்டருக்கு ரூ.15 குறைய வாய்ப்பு

ByA.Tamilselvan

Jul 9, 2022

சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.15 குறைக்குமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உணவு மற்றும் பொது வினியோகத்துறை, கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், சமையல் எண்ணெய் விலையை அதிகபட்ச சில்லரை விலையில் 15 ரூபாய் குறைக்க வேண்டும் என்றும், விலை குறைக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் முன்னணி சமையல் எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே மாதம் முன்னணி சமையல் எண்ணெய் நிறுவனங்களுடன் நடத்திய கூட்டத்தில், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் (பார்ச்சூன்) ஒரு லிட்டர் ‘பேக்’கின் விலை ரூ.220-ல் இருந்து ரூ.210 ஆக குறைக்கப்பட்டது.
சோயாபீன் (பார்ச்சூன்) மற்றும் கச்சி கானி எண்ணெய் ஒரு லிட்டர் விலை ரூ.205-ல் இருந்து ரூ.195 ஆக குறைக்கப்பட்டது. சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததை அடுத்து, எண்ணெய் விலை குறைப்பு ஏற்பட்டது.
குறைக்கப்பட்ட வரியின் முழுமையான பலன் நுகர்வோருக்கு மாறாமல் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு எண்ணெய் தொழில்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.