• Sat. Apr 20th, 2024

மதுரையில் மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்ற எடப்பாடியார்..

Byகுமார்

Sep 29, 2022

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் சிவகாசி மற்றும் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தின் மூலம் காலை 7 மணி அளவில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி .உதயகுமார் செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ம.பா.பாண்டியராஜன், விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி ராஜன் செல்லப்பா, மற்றும் மாவட்ட கழகச் செயலாளர்கள் செந்தில்நாதன் ,முனியசாமி, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ் எஸ் சரவணன்,பிரபாகரன் டாக்டர் பரமசிவம், ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.திருமங்கலம் ஹரிஷ் ஹோட்டல் அருகே முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளும், கழக அமைப்புச் செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன், தேனி நாராயணசாமி, லோகிராஜன் உள்ளிட்ட தேனி மாவட்ட கழக நிர்வாகிகளும், தென்காசி மேற்கு மாவட்ட செயலாளர் குட்டியப்பா, முன்னாள் அமைச்சர்கள் சண்முகநாதன் ராஜலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள்பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் வரவேற்றனர் அதனைத் தொடர்ந்து பாரதி யுகேந்திரா சார்பில் காஞ்சி மகா பெரியவர் படம் எடப்பாடியாருக்கு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ரிங் ரோடு வழியாக பிரச்சார வாகனத்தில் மேலக்கோட்டை அருகே எடப்பாடியார் வரும்பொழுது கழக அம்மா பேரவை சார்பில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் சாலை இருபுறமும் சித்திரை திருவிழா போல் மக்கள் வெள்ளம் போல் திரண்டு இருந்தனர். அப்போது அங்கிருந்த மக்கள் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டனர், அதைத் தொடர்ந்து பிரச்சாரம் வாகனத்தில் எழுந்து நின்று மக்கள் வெள்ளத்தில் எடப்பாடியார் இரட்டை இலையை காண்பித்தவரே மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்றார் சென்றார். தொடர்ந்து வழியெங்கும் கழகத் தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சார்பில் அவரது மகள் பிரியதர்ஷினி வெற்றிக்கு அடையாளமாக வாள் கொடுத்து வரவேற்றார் அதனை தூக்கிப்பிடித்து மக்களிடத்தில் தான் வைத்த போது பலத்த கைத்தட்டல் எழும்பியது.

பெண்கள் பூரண கும்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று மலர் தூவி வரவேற்றனர், மேலும் கழகத் தொண்டர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, வெள்ளை புறா ஒன்றை பறக்கவிட்டார்,வெற்றிக்கு அடையாளமாக வெற்றிலை மாலை எடப்பாடியாருக்கு அணிந்து வரவேற்கப்பட்டது. மேலும் மீண்டும் தமிழகத்தில் முதலமைச்சராக வரவேண்டும் என்று அடிப்படையில் கழகத் தொண்டர்கள் கிரீடம் அணிந்து வரவேற்றனர். சிவரக்கோட்டை பகுதியில் விவசாயிகள் ஏராளமாக திரண்டு விவசாயிகளுக்கு வாழ்வாரம் சிறக்க பல்வேறு திட்டங்களை வழங்கியும், தொடர்ந்து கடந்த அம்மா ஆட்சி காலத்தில் சிப்காட்டுக்கு எதிரான அரசாணை ரத்து செய்து எங்கள் விளைநிலங்களை பாதுகாத்த எடப்பாடியார் வாழ்க என்று கோசமிட்டனர். பெண்கள் பூரண கும்பம் வைத்து தங்கள் குலசாமி வருகின்ற வரவேற்பது போல் குலவையிட்டு வருகின்றனர், அவர்களை பார்த்து எடப்பாடியார் கும்பிட்டு சென்றார், அதனைத் தொடர்ந்து கள்ளிக்குடியில் எடப்பாடியார் வரும் பொழுது மிகப்பெரிய பிரமாண்ட முறையில் எழுச்சி மீது வரவேற்பு அளிக்கப்பட்டது அங்கு தொழிலாளர்களும், இளைஞர்களும் திரண்டு எடப்பாடியார் வாழ்க என்று கோஷமிட்டனர். ஒரு தொண்டர் எடப்பாடியாருக்கு அருகே சால்வை அணிவிக்க முற்பட்டபோது அவரை அழைத்து கனிவுடன் பெற்றுக் கொண்டார் . மேலும் அங்கிருந்த முதியோர்கள் எல்லாம் மீண்டும் தமிழகத்தை ஆள வா ராசா என்று எடப்பாடியாரை பார்த்து கோஷமிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *