முதலமைச்சர் பதிவி கொடுத்த சின்னம்மாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியை வரலாறு மன்னிக்காது என திருச்சி மாநாட்டில் ஒபிஎஸ் கடும் தாக்கு
திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது..அண்ணா பெயரால் இருக்கும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். அதிமுக-வின் ஆணிவேர் தொண்டர்கள் தான். 2 முறை முதல்-அமைச்சர் பதவியை எனக்கு அம்மா கொடுத்தார். 3வது முறை சின்னம்மா தான் என்னை முதலமைச்சராக ஆக்கினார்கள். திரும்ப கேட்டார்கள், கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். எடப்பாடி பழனிசாமி அவர்களே உங்களுக்கு யார் பதவியை தந்தது? எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகி நீங்கள்? வரலாறு உங்களை மன்னிக்குமா? உங்களில் ஒருவராக தூய தொண்டர்களில் ஒருவரை முதலமைச்சர் ஆக்கும் கடமை எனக்கு உள்ளது. உங்களுக்கு மனசாட்சி இருந்தால் கட்சியின் நிதியை ஒரு பைசாகூட நீங்கள் செலவு செய்யக்கூடாது. அதை எப்படி நீங்கள் கையாள்கிறீர்கள்? என்பது தொடர்பாக உறுதியாக விசாரணை நடத்தப்பட்டு, தவறாக பயன்படுத்தியவர்களுக்கு தண்டனை உறுதியாக வழங்கப்படும். அதிமுக தொண்டர்களை நம்பிதான் நாங்கள் தர்ம யுத்தத்தை தொடங்கி உள்ளோம். ஜனநாயக முறையில் அதிமுக தொடர்ந்து இயங்க வேண்டும். தொண்டர்களுக்காக எந்த தியாகமும் செய்ய தயார். இவ்வாறு அவர் பேசினார்.