முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2மணி நேரம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஏழு பேர் நடத்திய ரகசிய ஆலோசனை கூட்டம் பேசு பொருளாகி உள்ளது.
தமிழக முழுவதும் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அனைவரும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்து இருந்தார். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் 6 பேருடன் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஒன்றிணைக்க வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் திண்டுக்கல்லில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்திருந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தங்கியுள்ள தனியார் ஹோட்டலில் முன்னாள் அமைச்சர்கள்
திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன்,
கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி , தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ், ஓ.எஸ்.மணியன் ஆகியோருடன் திடீர் அவசர ஆலோசனை செய்தார்.
இந்த ஆலோசனை இன்று காலை 2 மணி நேரம் நீடித்தது. பல விவாதங்கள் நடந்துள்ளன. ஆலோசனை முடிவில், பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின்
நிபந்தனையை ஏற்க இபிஎஸ் மறுப்பு தெரிவித்தார். மேலும்
உட்கட்சி விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்படும். மேலும் செங்கோட்டையனின் கட்சி பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.
இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 12 மணி வரை நடந்த ரகசிய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ரகசியமாக வந்து பத்திரிக்கையாளர்களுக்கு தெரியாமல் பதுங்கிப் பதுங்கி காரில் ஏறி சென்றனர்.













; ?>)
; ?>)
; ?>)