• Sat. Mar 22nd, 2025

ஆப்கானிஸ்தானில் அரைமணி நேரத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் !

ByP.Kavitha Kumar

Feb 22, 2025

ஆப்கானிஸ்தானில் அதிகாலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் முறையாக இன்று அதிகாலை 4.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 அலகுகளாக பதிவானது. இது 100 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டாவது முறை ரிக்டர் அளவில் 4.2 அலகுகளாக இன்று அதிகாலை 4.33 மணிக்கு 150 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து அரைமணி நேரத்திற்குள் இரண்டு நில நடுக்கங்கள் ஏற்பட்டதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.