• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

வாக்கு சேகரிப்பின் போது, கோரிக்கை வைத்த காட்டுபுதூர்பகுதி வாக்காளர்கள், வெற்றி பெற்று வந்ததும் நிறைவேற்றி தருவேன்-விஜய் வசந்த் வாக்குறுதி

காட்டுபுதூரில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வாக்குகள் சேகரித்தார் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்.

தோவளை ஊராட்சி ஒன்றியம் காட்டுபுதூரில் திறந்த வாகனத்தில் வாக்குகள்  சேகரிக்க வருகை தந்த கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ்  வேட்பாளர் விஜய் வசந்த்-க்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். பின்னர் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கொடியுடன் வரவேற்றனர். அங்குள்ள அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கும், பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் அங்கு வாக்குகள் சேகரித்தார். பின்னர் அங்கிருந்து திடல் ஊராட்சி ஊராட்சியில் வாக்குகள் சேகரிக்க வருகை தந்த வேட்பாளர் விஜய் வசந்த்-க்கு தோழமைக் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கு வாக்குகள் கேட்டு திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்த வேட்பாளர் விஜய் வசந்தி-டம் குளத்தில் படித்துறை கட்டி தர வேண்டும், சுற்று சுவர் பழுதடைந்த நிலையில் உள்ளதால் தண்ணீர் வெளியேறி வீணாகிறது சுற்று சுவர் கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். வெற்றி பெற்ற உடன் உங்கள் கோரிக்கை நிறைவேற்றபடும் என வாக்குறுதி அளித்தார். இந்த  பிரச்சார பயணத்தில் நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், காங்கிரஸ் வட்டார தலைவர் நாஞ்சில் செல்வராஜ்,  திமுக நிர்வாகிகள் கேட்சன், பூதலிங்கம் உட்பட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட  தொண்டர்கள் கலந்து கொண்டனர்.