• Wed. Aug 12th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் பெய்த கன மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு.., விவாசாயிகள் மகிழ்ச்சி..!

ByP.Thangapandi

Nov 27, 2023

உசிலம்பட்டி நகர்ப்பகுதி மற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவாசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சில தினங்களாக பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருகின்ற சூழலில்,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளான தொட்டப்பநாயக்கனூர், நக்கலப்பட்டி, உத்தப்பநாயக்கனூர், தி.விலக்கு, செல்லம்பட்டி உள்ளிட்டப்பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.,
இதனால் சாலைகளில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். மேலும் இந்த கன மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.