• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழையால்.., நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம்..!

ByG.Suresh

Dec 21, 2023
சிவகங்கை மாவட்டம் முழுவதும்  தொடர் மழையால் நெற்ப்பயிர்கள் பல இடங்களில் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
வங்கக்கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  காரணமாக, தென் மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்திலும் அவ்வபோது மழை பெய்தது.   இன்று காலை முதல் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  
மழை பெய்துவருவதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது வேலைக்கு செல்வோரும்  பள்ளிக்கு விடுமுறை அறிவிக்காததால், மாணவ மாணவியர்களும் மழையால் அவதி அடைந்தனர். அடை மழை போல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். சாலையோர வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொடர் மழையால குடை வியாபாரம் அதிகரித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் முழுவதும்  தொடர் மழை பெய்து வருவதால் நெற்ப்பயிர்கள் பல இடங்களில் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.