


கோவை, செல்வபுரம் பகுதியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 720 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
கோவை, செல்வபுரம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து காவல் துறையினர் செல்வபுரம் கல்லாமேடு, சுடுகாடு அருகே சோதனை செய்தனர். அப்பொழுது அங்கு இருந்து ஒருவர் காவல் துறையினரை பார்த்தவுடன் ஓடினார். காவல் துறையினர் அவரை துரத்தி பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவரிடம் போதைக்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரண மாத்திரைகள் இருந்தன.


மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் கலாம் என்பதும் அவர் அப்பகுதியில் உள்ள இளைஞர் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது மேலும் அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பத்துக்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் அஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

