சாணி வயல் கேடயப்பட்டி ஆகிய ஊர்களை பதற வைக்கும் பல்லாங்குழி சாலை மரண குழிகள் இருப்பதை அரியாமல் சென்று வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்! முழுமையாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை ! திருச்சி கீரனூர் வரை பூங்குடி மேக்கடிப்பட்டி கேடயப்பட்டி சானிவயல் சானி வயல் கண்டியர்சாலை வழியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரையிலும் சென்று வருகிறது.

இந்த ஊர்களில் பள்ளிக்கூடங்கள் புட் கம்பெனி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் எப்போதும் பரபரப்புடன் காணப்படுவது வழக்கம். மேலும் இந்தப் பகுதியில் ஆன்மீகத் தலங்களாக சிவன் கோயில் அங்காள பரமேஸ்வரி பாலமுருகன் ஸ்ரீநார்த்தாமலை மாரியம்மன், ஸ்ரீ நீராவி கருப்பர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் முக்கிய ஊர்களாக விளங்கி வருகிறது. இந்த வழியாக ஊர்களை நோக்கி செல்லும் சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
குறிப்பாக தினசரி பணிக்கு செல்லும் அரசு ஊழியர் தனியார் ஊழியர்கள் பள்ளியில் கல்லூரி மாணவர்கள் வியாபாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த வழியாக பயணம் செய்வதால் அவரகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சாலையின் முழுவதும் ஆழமான குழிகள் உருவாகியுள்ளன குழிகளில் விழுந்து வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுவதும் நான்கு சக்கர வாகனங்கள் பழுதடைவதும் அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் போதிய தெரு விளக்குகள் இல்லாததால் இந்த சாலை மரணப் பாதையாக மாறும் அபாயம் நிலவி வருகிறது.

இந்த சாலை குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார்கள் அளிக்கப்பட்ட இதுவரை தீர்வு எடுக்கப்படவில்லை? என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதனால் அதிகாரிகளின் அலட்சியமே இந்த அவல நிலைக்கு காரணம் ?என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் அவசர தேவைகளுக்கு இந்த வழியாக செல்லும் ஆம்புலன்ஸ் தீயணைப்புத் துறை வாகனம் இந்த சாலை வழியாக செல்லும்போது தாமதம் ஏற்படுவது கவலைக்கிடமாக உள்ளது. இது மனித உயிருக்கு நேரடி ஆபத்தாக மாறக்கூடும் என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே இந்த வழியாக செல்லும் சாலையை முழுமையாக புதுப்பித்து சீரமைக்க வேண்டுமாய் இந்த பகுதி ஊர்களின் பொதுமக்கள் வலியுறுத்துகின்றார்கள்.




