• Wed. Jan 22nd, 2025

விக்கிரமங்கலம் டாஸ்மாக் அருகில் டிரைவர் படுகொலை

ByKalamegam Viswanathan

Dec 12, 2024

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் டாஸ்மாக் கடை அருகில் வாலிபர் கொடூரமான நிலையில் கொலை செய்து இறந்து கிடப்பதாக விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்து கிடந்த நபரை விசாரணை செய்த போது விக்கிரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட வி கோவில்பட்டி கிராமத்தைச்சேர்ந்த பரமன் மகன் சுரேஷ் பாபு வயது 37. டிரைவராக வேலை செய்து வருவதாக தெரியவந்தது. உசிலம்பட்டி டிஎஸ்பி செந்தில்குமார் செக்கானூரணி இன்ஸ்பெக்டர் திலகராணி மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர். இதன் பேரில் போலீசார் மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் இப்பகுதியில் ஒரே பரபரப்பாக காணப்பட்டது. இந்த கொலை கள்ளக்காதலால் கொலை செய்யப்பட்டாரா,முன் விரோதத்தால் கொலை செய்யப்பட்டாரா, கொடுக்கல் வாங்கலில் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் பலகோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்