சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியர் விருது வழங்கும் விழா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு துனை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு வெள்ளி பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். மேலும் அமைச்சர்கள் ம.சுப்பிரமணியம், சேகர்பாபு , சென்னை மேயர் பிரியா தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லிநோனி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் , இயக்குனர்கள் முனைவர் கண்ணப்பன், முனைவர் நரேஷ், குப்புசாமி , ராமேஸ்வர முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவரும் கடம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் சா.அருணன் அவர்கள் மாணவர்களின் கல்வி ஒழுக்கம் மாணவர்களுக்கு ஆற்றிய சேவைகள் பள்ளி கட்டமைப்பு மேம்படுத்தியது என அவர் சேவையை பாராட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி பாராட்டினார்.

இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப்.இ.ஆ.ப அவர்களிடம் சான்றிதழ் வெள்ளி பதக்கத்தை காண்பித்து வாழ்த்தபெற்றார் மேலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மோகனா அவர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அமுதா , தேன்மொழி , ரவி ஆகியோரிடமும் வாழ்த்து பெற்றார் ஆசிரியர் சா.அருணன் அவர்களுக்கு, தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் மாணவர்கள் முன்னாள் மாணவர்கள் உயர் அலுவர்கள் , அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் , பல்வேறு விளையாட்டு குழுவினர் , பல்வேறு அமைப்பினர் பல்வேறு கட்சியின் பிரமுகர்கள் என ஆயிரக்கணக்கானோர் வாழ்த்து தெரிவித்தனர்.