

தமிழக அரசு கலைஞர் நூற்றாண்டு விழாவை வெகு விமர்சையாக தமிழகம் முழுவதும் கொண்டாடி வரும் நிலையில். நூற்றாண்டு விழாவை நினைவு கூறும் வகையில். ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு கூட்ட அரங்கம் மற்றும் புனரமைக்கப்பட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கூட்ட அரங்கம்திறப்பு விழா விமர்சனம் நடைபெற்றது. சேர்மன் ரவிசங்கர் தலைமை வகித்தார். துணை சேர்மன் லதா, கிராம பி.டி.ஓ முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆணையர் செந்தில்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, எம்.எல்.ஏ. கண்ணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் சிவக்குமார், ராஜசேகர், பிரித்திவிராஜன், ராஜேஸ்வரி, நடராஜன் உட்பட பெருந்திரளான கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் ஒன்றிய மேலாளர் தாமோதரன் நன்றி தெரிவித்தார்.
