• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நாட்டைப்பத்தி கவலைப்படவேண்டாம்..! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு..,

ByP.Thangapandi

Jan 21, 2024

உதயநிதி எங்களை பத்தியும் கவலைப்படவேண்டாம், உங்களை பத்தியும், உங்க அப்பாவை பத்தியும், உங்க வீட்டைப்பத்தி கவலைப்படுங்கள் என்றும், நாட்டைப்பத்தி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றும் உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் அருகில் அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 107- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நகர செயலாளர் பூமாராஜா தலைமையில் நடைபெற்றது.,

இந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சர்ருமான ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.,

இதில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எதிர் கட்சியாக கருதுகிற இன்று ஆளுகிற கட்சி கூட்டணி எத்துணை வைத்திருந்தாலும் கொங்கு மண்டலம் என்றால் இப்பொழுது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை பார்த்து தான் பாண்டிய மண்டலத்தில், கொங்கு மண்டலத்தில் எப்படி இரட்டை இலை கோட்டையாக இருக்கிறதோ அதே போன்று பாண்டிய மண்டலம் எக்கு கோட்டையாக புரட்சித் தமிழர் கோட்டையாக மாறும் எனவும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உழைப்பால் இரண்டு கோடி தொண்டுகளை கொண்ட மாபெரும் இயக்கமாகும். சாவால் விட்டு சொல்கிறேன் ஸ்டாலின் அவர்களே, உதயநிதி அவர்களே 234 தொகுதிகளிலும் நிர்க வைத்து செயிக்க வைத்து ஆட்சி கட்டிலில் அமர வைத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அதிமுக கழகம்.

உங்க அப்பனும், உங்க தாத்தாவும் இருக்கிற போதே 2011 ல் திமுக விற்கு எதிர்கட்சியே இல்லை என்று தீர்ப்பளிக்க செய்தவர் அம்மா அவர்கள் என்றும், உதயநிதிஸ்டாலின் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காலான் நேற்று வரை மாடத்திலிருந்து சட்டசபையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த விளையாட்டு பையனிடன் விளையாட்டுத்துறையைக் கொடுத்துவிட்டு மணிமகுடம் என்ற காரணத்தால் தமிழகத்தில் அரசியல் வரலாறு தெரியாத காரணத்தால் உதயநிதி ஸ்டாலின் அவர்களே உங்கள் அனுதாபம் அதிமுக தொண்டனுக்கு தேவையில்லை எனவும் எடப்பாடியார் தலைமையில் அதிமுக உள்ளது என்றும், உதயநிதி எங்களை பத்தியும் கவலைப்படவேண்டாம் உங்களை பத்தியும், உங்க அப்பாவை பத்தியும் உங்க வீட்டைப்பத்தி கவலைப்படுங்கள் என்றும் நாட்டைப்பத்தி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றும், உதயநிதிக்கு இளைஞரணி மாநாடு எப்போது எல்லாம் ஸ்டாலின் இளைஞரணியாக இருக்கிறாரோ அப்போது எல்லாம் முதல் மாநாடு இப்பொழுது அவரது மகன் உதயநிநியுடன் இரண்டாவது மாநாடு அடுத்து அன்புநிதி இளைஞரணியாக இருக்கிராறோ அப்போது மூனலறாவது மாநாடு என்றும் இதில் எங்கு ஜனநாயகம் இருக்கு என்று கேள்வி எழுப்பினார், தமிழகத்தின் ஆட்சி அதிகாரமும் உங்கள் குடும்பத்திற்கு பட்டா போட்டுதரவில்லை. இந்த தமிழகத்தின் மக்கள் நியாய நீர்ப்பை தர வெகு தொலைவில் இல்லை. ஆகவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் புரட்சிதமிழர் எடப்பாடியார் தேர்தல் வகுத்தத்தை இன்றைக்கு வலிமையான கூட்டணியை அமைத்துக் கொண்டிருக்கிறார் என்றும், வெற்றி பாதையில் பயணித்துக கொண்டிருக்கிறார் என்றும் பேசினார்.