• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைய வேண்டாம்..,

ByS.Ariyanayagam

Apr 12, 2026

கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைய வேண்டாம் என முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி போட்டியிடும் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஆர் எம் டி சி காலனி, அழகர் நாயக்கம்பட்டி உட்பட பல இடங்களில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: நத்தம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தொகுதிக்கு அறிமுகமே இல்லாதவர். இந்த தொகுதியை பற்றி என்னவென்றே தெரியாதவர். நான் உங்களுடன் கலந்து பல ஆண்டுகளாக இங்கு உங்களுக்காக உழைக்கிறேன்.

நத்தம் தொகுதிக்கு பல நல்ல திட்டங்களை நான் கொண்டு வந்துள்ளேன். எடப்பாடி தலைமையில் நல்லாட்சி அமையும் போது இன்னும் பல திட்டங்களை நான் கொண்டு வருவேன் மக்களுக்கு தொண்டாட்ட எனக்கு வாய்ப்புத் தாருங்கள்.
கையிலே வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அழைந்த கதையாக இருக்க கூடாது.

நான் இந்த தொகுதியை சேர்ந்தவன். வெளியூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளருக்கு இந்த தொகுதியை பற்றி என்ன தெரியும். இவ்வாறு நத்தம் விஸ்வநாதன்
பேசினார்.