• Tue. Mar 21st, 2023

படிப்பு பிரசாதம் மாதிரி அதனை விற்காதீர்கள்- நடிகர் தனுஷ்

வெங்கி அத்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 17ம் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நேற்று மாலைநடைபெற்றதுஇசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் பேசிய நடிகர் தனுஷ`எதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் பெற்றோர்களின் வேண்டுதல்கள் உங்களுடைய கைத்தட்டலாக என்னை வந்து சேர்கிறது. இது 90- களில் நடகக்கூடிய ஒரு கதை.

இந்தப் படத்துல நடிக்குறப்போதான் ஆசிரியர்களின் வேலை எவ்வளவு கஷ்டம்னு தெரிஞ்சது. ஆசிரியர்கள் தான் நம் தலையெழுத்தை மாற்றக் கூடியவர்கள். லாக்டவுன்ல தான் வெங்கி இந்த கதையைச் சொன்னார். நானே அப்போ வேலை இல்லாம மன உளைச்சல்ல இருந்தேன். வர்ற கதையை எப்படியாவது மறுத்துடலாம்னு இருந்தேன். கதையைக் கேட்டதும் எனக்கு பிடிச்சிருச்சு. அவரிடம் எப்போது தேதி வேண்டும் என்று தான் கேட்டேன்.

இந்தப்படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்னு நம்புறேன்.சமுத்திரக்கனி அண்ணா இல்லாத தமிழ் படத்தையும் பாக்க முடில. தெலுங்கு படத்தையும் பாக்க முடில.விஐபி படத்தப்போ லைட்டா திணறுவாரு. இப்போ வாத்தி படத்துல 4 பக்க டயலாக்கையும் சரசரன்னு பேசிடறாரு. ஜி.வி. போல்டன் ஃபார்ம்ல இருக்காரு. படிப்பு பிரசாதம் மாதிரி. அதை பைவ் ஸ்டார் ஹோட்டல்ல விக்காதீங்க' - இதுதான் வாத்தி படத்தின் கதை. பள்ளியில் பெற்றோர்கள் பீஸ் கட்டிருவாங்கன்னு என்று கவனமின்றி சுத்திருக்கேன். என் பிள்ளைகளை படிக்க வைக்குறப்போ தான் அது தெரியுது. எந்த சூழ்நிலை வந்தாலும் படிப்பு மிகவும் அவசியம். எண்ணம் போல் வாழ்க்கை, உங்களுடைய எண்ணத்தை படிப்பில் வையுங்கள் அது தான் உங்களைக் காப்பாற்றும்." எனப் பேசிய தனுஷ்,என் வண்டிக்கு பின்னால் என்னைப் பின்தொடர்ந்து வருகிறீர்கள். உங்கள் பெற்றோர்கள் உங்களை நம்பி அனுப்பிவைக்கிறார்கள். அப்படி நீங்கள் செய்யும் போது எனக்கு பயமாக இருக்கிறது.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *