• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

முதல்வர் விஜய் பெயரையும் என் பெயரையும் சொல்லிசெய்ய கூடாது -அமைச்சர் கீர்த்தனா அறிவுறுத்தல்..,

ByK Kaliraj

May 16, 2026

சிவகாசி தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் சிவகாசி அருகே செங்கமலாச்சியாபுரத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் கீர்த்தனா,

நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பால் இந்த வெற்றி எனக்கு கிடைத்துள்ளது.

எம்.ஜி.ஆருக்கு பின் மக்கள் மிகப்பெரிய வெற்றியை விஜய்க்கு அளித்து உள்ளனர்.

தவெக தொண்டர்களும், நிர்வாகிகளும் சட்டத்தை மதித்து ஒழுக்கத்துடன் இருந்து திமுக அதிமுகவுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

முதல்வர் விஜய் பெயரையும் என் பெயரையும் சொல்லி யாரிடமும் பணம் வாங்கவோ ஊழல் செய்யவோ கூடாது என அறிவுறுத்திய அமைச்சர் கீர்த்தனா,
அதிகாரிகளிடம் மரியாதையாக பேச வேண்டும் என்றார்.

பிற கட்சியினரை போல் தான் தவெக என யாரும் கூறி பேசும் போல் நடக்க கூடாது.

விஜய் அண்ணாவின் முகத்தாலும், உங்கள் உழைப்பாலும் வெற்றி பெற்றுள்ளேன் நாம் ஒற்றுமையாக இருந்து வெற்றியை நாம் தொடர்ந்து தக்க வைக்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சி வந்துள்ளதாக அதிகாரிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

விஜயை கண்டிப்பாக சிவகாசிக்கு அழைத்து வருவேன் என்றார்.