வெளியூர்காரர்கள் இங்கு வந்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் இது சர்வ கட்சியை சேர்ந்த தலைவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள் நாங்கள் எல்லாம் பாரம்பரியமாக பூர்வீகமாக மலை அடிவாரத்தில் குடி இருக்கிறோம்

எனக்கு 72 வயது ஆகிறது இப்போது எங்கே தீபம் ஏற்றுகிறார்களோ உச்சி பிள்ளையார் கோவில் தான் ஏற்றுகிறார்கள் மழை உச்சியில் ஏற்றி நான் பார்த்ததில்லை

வெளியூர் காரர்களுக்கு மலை உச்சியில் ஏற்ற சொல்ல உரிமை இல்லை . இங்கு கோயில் ஸ்தானிய பட்டர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
வெளியூர் காரர்களால் தான் கலவரம் வருகிறது உள்ளூர் மக்கள் இதனால் சிரமப்படுகிறோம் எங்கு சென்றாலும் அடைத்து வைக்கிறார்கள்.
வெளியூர்க்காரர்கள் யாரும் வந்து ஆலோசனை சொல்ல வேண்டாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கிராமத்தை அடிப்படையாகக் கொண்டது செயல்பாடு களுடன் சேர்ந்து அனைத்து செயல்களும் செய்வோம்.
பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சிரமமான ஊராக மாறிவிட்டது.
உச்சி பிள்ளையார் கோவிலில் சிறிதாக இருந்தது.கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஏற்ற சொல்லி பெரிதாக்கினோம். அதில் விளக்கு ஏற்றுவார்கள் அதை தான் நாங்கள் சேர்ந்து தீபமாக்கினோம்.
அதற்கு மேல் கிடையாது என் பாரம்பரியத்தை சொல்ல வழியே இல்லை. ஆனால் இதை சொல்லி வெளியூர்க்காரர்கள் போராட்டம் செய்கிற போது உள்ளூரில் இருக்கும் எங்கள் சகோதரர்கள் வெளியில் வர முடியாத அளவுக்கு சிரமமாக உள்ளது.
சாலையோர வியாபாரிகள் வேலை பார்க்க முடியவில்லை. வர்த்தகம் நடைபெறவில்லை மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. பதட்டமான சூழலை உருவாக்குகிறார்கள்.
உள்ளூரில் இருப்பவர்கள் எந்த இயக்கமாக இருந்தாலும் தீபம் குறித்து அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் வெளியூரிலிருந்து 500 பேர் ஆயிரம் பேர் வந்து பதட்டமான சூழலை கொண்டு வர வேண்டாம்.
எனது குடும்பத்தில் இந்த பகுதியில் பல்வேறு பொறுப்புகளில் நாங்கள் இருந்துள்ளோம்.
அப்படி இருந்தும் எங்களால் ஊருக்கு கட்டுப்படுத்த முடியவில்லை
தயவு செய்து வெளியூர்க்காரர்கள் வர வேண்டாம் உள்ளூர் காரர்கள் உங்களில் உரி மையை சொல்லுங்கள் செயல்படுத்துங்கள் இனிமேல் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் தமிழக அரசு தான் கட்ட வேண்டும் உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும்.
காலையில் கடையை அடைக்க கிராமத்தின் சார்பாக கூறியது குறித்து?
அவர்கள் கிராமம் கிடையாது. எல்லாரும் இந்த ஊரில் பிறந்தவர்கள் நாங்கள். உள்ளூரில் இருப்பவர்களுக்கு உரிமை உள்ளது அவர்கள் செய்யட்டும் வெளியூரில் இருந்து வர வேண்டாம் என்று சொல்கிறோம்.
நீதிமன்றம் சொல்கிறது அவர்களின் உரிமையை அவர்கள் நிலைநாட்டட்டும். மலைமேல் தீபம் ஏற்றும் வழக்கமே இல்லை. மலை மேல் தீபம் தீபம் ஏற்ற வழக்கு போட்ட நபர் அவரெல்லாம் பார்த்ததே இல்லை மலை மேல் இப்படி ஏற்றியதே இல்லை.

தீபம் ஏற்ற வேண்டும் என்றால் உள்ளூர் காரர்கள் மட்டும் செய்யுங்கள் அந்த வேலையை. நாங்கள் சின்ன வயதில் அந்த ஏறி விளையாடிய பொழுது எல்லம் இந்த நிலைமை எல்லாம் வரவே இல்லை.
அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் தான் பேசுகிறோம் சிறுபான்மையினர் கருத்தை நாங்கள் பேசவில்லை நாங்கள் அனைவரும் இந்து தான். இங்கு இஸ்லாமியர்கள் கம்மிதான் இந்துக்கள் தான் அதிகமாக உள்ளோம் என மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி எம்எல்ஏ கூறினார்.




