• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

தூத்துக்குடியில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை..,

வானிலை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று 4வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தமிழகத்தில் வரும் அக்.22, 23 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று 4வது நாளாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் 272 விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.