• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

என்னை அப்படி அழைக்காதீர்- முதல்வர் ஸ்டாலின்

ByA.Tamilselvan

Aug 26, 2022

கோவை மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் பேசும் போது முதல்வர் ஸ்டாலின் என்னை அப்படி அழைக்கவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு பேசும் போது என்னை அப்படி அழைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். “திராவிட மாடல் தந்தையே ” என திமுக தொண்டர்கள் நேற்று புதிய பட்டப்பெயர் கொடுத்த நிலையில் புதிய புகழ் எனக்கு தேவையில்லை. இருக்கும் புகழே போதும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் என் உயிர் இருக்கும் வரை மக்களுக்காக உழைத்துக்கொண்டே தான் இருப்பேன். திராவிட மாடல் இலக்கணப்படி இன்று ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களை காக்ககூடிய அரசாக மட்டுமல்லாமல் மண்ணை காக்ககூடிய அரசாக உள்ளது திமுக அரசு என்று பெருமிதம் தெரிவித்தார்.