ராஜகோபாலன் பட்டி ஊராட்சியில் 73 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் பணிகள் துவங்குவதற்கான பூமிபூஜை.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் உள்ள ஜே .ஜே .நகர் முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து வைகை சாலை வரை கழிவுநீர் வாய்க்கால் அமைப்பதற்காக 15 வது நிதி குழு மானியத்தின் கீழ் ரூ 24.7 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பூமி பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வேல்மணி பாண்டியன் தலைமை தாங்கினார் .மாவட்ட கவுன்சிலர் ஜி. கே .பாண்டியன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .சிறப்பு அழைப்பாளராக ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார் . நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் தயாளன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீரா கார்த்திகேயன், திமுக நகர செயலாளர் சரவணன் ,கவுன்சிலர்கள் தமிழ்செல்வி, ஜெயலட்சுமி ,சவுந்தரபாண்டியன், மச்ச காளை ,மணி முருகன் ,முனியாண்டி, ராஜீவ் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர் .
மேலும் சத்யா நகரில் ஏற்கனவே 15 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அதேபோல் சீதாராம் தாஸ் நகர் செல்வ விநாயகர் தெரு ,கணபதி ஆசிரியர் வீடு ஆகிய பகுதிகளில் ரூபாய் 34 லட்சத்தில் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது .