• Sat. Apr 20th, 2024

கண்ணை நம்பாதே – விமர்சனம்

Byதன பாலன்

Mar 17, 2023

இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மாறன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது அடுத்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படமும் ஒரு த்ரில்லர் படம்தான்.

உதயநிதி ஸ்டாலின் ஒரு பேச்சுலர். பிரசன்னா தங்கியிருக்கும் வீட்டில் இவரும் இணைந்து தங்குகிறார். அன்று இரவு அவர்கள் வெளியில் சென்ற போது காரை ஓட்ட முடியாமல் தவிக்கிறார் பூமிகா.

அவருக்கு உதயநிதி உதவி செய்து அவரை அவரது வீட்டில் கொண்டு போய்விடுகிறார். பூமிகாவின் வற்புறுத்தலால் அந்த காரிலேயே திரும்பவும் தனது வீட்டிற்குத் திரும்புகிறார்.

மறுநாள் காலை காரை பூமிகா வீட்டில் விடலாம் என உதயநிதி கிளம்புகிறார். கார் டிக்கியை அவர் திறந்து பார்க்க அதில் பூமிகா பிணமாகக் கிடக்கிறார்.இரவில் அவரது வீட்டில் கொண்டு போய் விடப்பட்டவர், இப்போது எப்படி காரில் பிணமாக இருக்கிறார் என தவிக்கிறார் உதயநிதி.பிரசன்னாவிடம் என்ன செய்யலாம் என ஆலோசிக்கிறார். இதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.ஒரு மர்ம நாவல் படிப்பது போல திருப்பங்களுடன் படம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத விதத்தில் திரைக்கதை அமைந்திருக்கிறது.கிளைமாக்சில் நாம் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். ‘கண்ணால் காண்பது பொய்’ என்பதுதான் ‘கண்ணை நம்பாதே’.உதயநிதி படம் முழுவதும் ஒரு இறுக்கமான முகத்துடனேயே இருக்கிறார்.பிரசன்னா என்ன சொல்கிறாரோ அதன்படியே நடந்து தொடர்ந்து சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.ஒரு கொலையிலிருந்து தப்பிக்க நினைத்தால் அடுத்தடுத்து வெவ்வோறு விதமான பிரச்சினைகளில் இருவரும் சிக்கிக் கொள்கிறார்கள்.

ஆரம்பம் முதல் ஒரு சராசரி இளைஞனாக இருப்பவர் கிளைமாக்சில் திடீரென ஆக்க்ஷன் ஹீரோவாக மாறுவதைத்தான் நம்ப முடியவில்லை.உதயநிதியின் காதலியாக ஆத்மிகா. கதையில் ஒரு கதாநாயகி இருக்க வேண்டுமென நடிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு குட்டி பிளாஷ்பேக்கில் அவர்கள் காதல் கதை முடிந்துவிடுகிறது.

உதயநிதி கூடவே படம் முழுவதும் பிரசன்னா வருவதற்கு பதிலாக அவருடன் உதயநிதி வருகிறார். பிரசன்னாவின் கதாபாத்திரத்தின் திருப்பம் நாம் சற்றும் எதிர்பாராதது.

கூடவே இருப்பவர்களையும் நம்பக் கூடாது என்பதற்கு இந்தக் கதாபாத்திரம் சிறந்த உதாரணம். படத்தின் வில்லனாக ஸ்ரீகாந்த். ஆனால், அவரது கதாபாத்திரம் படத்தில் நீண்ட நேரம் கழித்தே வருகிறது.உதயநிதியின் நண்பனாக சதீஷ். ஆரம்பத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். அதன்பின் படத்தில் காணாமல் போய்விடுகிறார். பூமிகாவின் கதாபாத்திரமும் ஒரு முக்கியமான கதாபாத்திரம். சுபிக்ஷா, வசுந்தரா, மாரிமுத்து, சென்ராயன் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள்.சித்துகுமார் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. படத்தில் இரவு நேரக் காட்சிகள் அதிகம். அதில் ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவு குறிப்பிடும்விதத்தில் அமைந்திருக்கிறது.இந்தக் காலத்தில் சென்னையில் சந்து, பொந்து என எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளது. பூமிகாவின் காரிலேயே சென்னையின் பல இடங்களில் உதயநிதியும், பிரசன்னாவும் சுற்றுகிறார்கள். எந்த ஒரு இடத்திலும் அவர்கள் காவல்துறையினரிடம் சிக்கி கொள்ளாமல்சுற்றுவது ஆச்சர்யமாக இருக்கிறது

தனது மகன் விபத்தில் இறக்கவில்லை என சந்தேகப்படும் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து அதன்பின் அதற்கான விசாரணையில் ஈடுபட்டதாகவே தெரியவில்லை. இப்படி பல கேள்விகள் படத்தில் உண்டு.ஆக்க்ஷன், த்ரில்லர்ஒரு படங்களில் அப்படியான கேள்விகள் எழவே கூடாது. என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.கண்ணை நம்பாதே நம்பி செல்பவர்களுக்கு ஏமாற்றம் தரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *