எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ஆர்.டி. என்று அழைக்கப்படும் பி.ஆர்.தமிழ்ச் செல்வம் தயாரித்துள்ள புதிய படம் ‘மெய்ப்பட செய்’ஆதவ் பாலாஜி கதாநாயகனாகவும், மதுநிக்கா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியுள்ளார் வேலன்.இப்படத்தில் பி.ஆர்.தமிழ்ச்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ராஜ்கபூர், ஓ.ஏ.கே.சுந்தர், ஞானபிரகாசம், சிவா, அட்டு முத்து, சூப்பர் குட் சுப்பிரமணி, விஜய கணேஷ், பயில்வான் ரங்கநாதன், ராகுல் தாத்தா, பெஞ்சமின், அனீஸ், எமில் கணபதி, ராகவமூர்த்தி, திண்டுக்கல் தனம், காஞ்சனா, தீபா, யமுனா உள்பட பலர் நடித்துள்ளனர்சுயநலத்துக்காகப் பல பாவங்களைச் செய்து அதிகாரத்தையும், சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளையும் பயன்படுத்தி மக்களோடு மக்களாகக் கலந்திருக்கும் குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாகவும், பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு படமாகவும் இப்படம் உருவாகியுள்ளது என்கிறார் இயக்குநர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா 23.04.2022 அன்று சென்னையில் நடைபெற்றது

அப்போதுஇயக்குநர்
ஆர் வி உதயகுமார் பேசியதாவது……
தமிழ் சினிமாவின் கண்டண்ட் திலகம் ராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள், அவர் தான் சிறு படங்களை வாழவைத்துக் கொண்டுள்ளார். தமிழ் சினிமா எப்படி இருக்கிறது என்பது அவர் பேச்சில் தான் விவாதிக்கப்படுகிறது. இப்படத்தின் எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ்க்கு முதலில் வாழ்த்துகள். இயக்குநர் வேலன் படத்தை நன்றாக எடுத்துள்ளார் மிகவும் பணிவாக உள்ளார். எங்களிடம் இருந்த பணிவை அவரிடம் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. பணிவு தான் எங்களை இந்த இடத்தில் வைத்துள்ளது. இயக்குநர் படத்தை மிகத் தெளிவாக தரமாக எடுத்துள்ளார். பாடல்கள் எல்லாமே மிக நன்றாக இருக்கின்றன. பாடலில் நாயகி தலையணையைப் பிய்த்துப் பறக்க விடுவதெல்லாம் நிஜ வாழ்வில் அனுபவத்துடன் செய்வது போல் செய்துள்ளார்கள். வாழ்த்துகள். நம்ம தமிழ்ப் படங்களை விட மற்ற மொழிப் படங்கள் ஓடுகிறது எனக் காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். தமிழைப் பார்த்துத் தான் பாலிவுட்டிலேயே படத்தை காப்பி அடித்து எடுத்தார்கள். தமிழ் சினிமா ஆண்ட மொழி ஆளும் மொழி. இரசிகர்கள் எல்லோரும் நல்லவர்கள், நம் படங்கள் அங்கு ஓடும் போது நாம் சந்தோசப்படுகிறோம் அல்லவா அது போல் இப்போதும் சந்தோசப்படுவோம். இப்போது கதைகளில் பஞ்சம் இருக்கிறது. அதைச் சரி செய்ய வேண்டும். இப்போது இயக்குநர் சங்கத்தில் இதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். நல்ல கதைகள் வைத்துள்ள இயக்குநர்களைத் தேர்ந்தெடுத்து அக்கதைகளைத் தயாரிக்கவுள்ளோம்.எங்கள் சங்கத்தின் மீது பல விமர்சனங்கள் இருந்தது. ஆனால், இந்த கொரோனா காலத்தில் பல உதவிகளைப் பெற்றுத் தந்தது எங்கள் சங்கம் தான் என்று சொல்லிக்கொள்கிறேன். தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளைக் கேட்டுத் தயாரியுங்கள். இப்படத்தை மிகச் சிறப்பாக எடுத்துள்ளார்கள். படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்
