அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக வாஷிங்டனில் இன்று பதவியேற்கிறார்.
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும். அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரீஸ் தோல்வியடைந்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம். அதன்படி இன்று அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனல்if ட்ரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் அரங்கில் பதவியேற்கிறார்.
இதற்கான கொண்டாட்டங்கள் அமெரிக்காவில் நேற்று முன்தினமே தொடங்கிவிட்டன. விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ட்ரம்ப் நேசஷனல் கோல்ப் கிளப்பில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட ட்ரம்ப் விருந்தினர்கள் 500 பேர் பங்கேற்றனர்
புதிய அதிபராக பதவியேற்கும் ட்ரம்ப்புக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் பதவியேற்கிறார்.