ராணுவ கட்டுப்பாடு கொண்ட கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று சிங்கக் குரலில் அடிக்கடி மேடையில் நினைவுபடுத்துவார் எங்க அம்மா .., ஆனால் தற்போது நான் தான் பொதுச்செயலாளர் என்னை பழைய பழனிச்சாமி என்று எண்ணிவிடாதீர்கள்! நான் வேற மாதிரி.., என்றெல்லாம் கூவிக் கொண்டிருக்கும் கட்சியாக மாறியிருக்கிறது என்கிறார்கள் மூத்த ரா.., ராக்கள், குற்றச்சாட்டை கிளப்பி இருக்கிறார்கள்.
எதற்காக இப்படி ஒரு குற்றச்சாட்டை தற்போது முன் வைத்திருக்கிறார்கள்! அப்படி என்ன அதிமுகவிற்கு அவசியமான விமர்சனங்கள், நாமும் அரைத்த மாவே அரைக்க கூடாது என்று பொறுத்து பொறுத்து தான் மூத்த ராராக்களிடம் பேசிக்கொண்டே வந்தோம். சட்டென்று எதிர்பாராத வகையில் வெகுண்டு எழுந்த மூத்த ராதாக்கள்.., அட போங்க சார்.., மன்னாதி மன்னன், புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி பார்த்து பார்த்து ரசித்து ரசித்து வளர்த்த கட்சியை நாசம் பண்ணிட்டாங்களே படுபாவிக.., என்றெல்லாம் நம்மிடம் புலம்ப ஆரம்பித்தனர். அப்படி என்னதான் குற்றச்சாட்டை சொல்லுகிறார்கள் என்பதை நம் காது கொடுத்து கேட்டோம்.
சில தினங்களுக்கு முன்பு பொதுக்கூட்டம் நடந்து முடிந்தது. அந்த பொதுக் கூட்டத்தில் பெரிய சலசலப்பு இல்லை, சிறிய சலசலப்பும் இல்லை, ஏதோ பொதுக்கூட்டம் நடந்து முடிந்தது. அந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எப்பயும் போல அவர் வேலையை அவிழ்த்து விட்டார். இதைத்தொடர்ந்து போதாத குறையாக நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி மறக்கவே முடியாத அளவிற்கு கே.பி முனுசாமி.., போன்றவர்கள் எல்லாம் மேடையையும், இடைக்கால பொதுச் செயலாளர் என்று அறிவிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் வார்த்தை ஜாலங்கள் எல்லாம் காட்டி மகிழ வைத்தார்கள். எங்களுக்கும் மகிழ்ச்சி எல்லாம் இல்லை சிறிய வேதனை தான்.
அப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் கட்சியிலிருந்து நீக்கி விட்டோம். இவருடன் வைத்தியலிங்கத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள், என்றெல்லாம் அறிவிப்பு விட்டார்கள். சரி ஏதோ வேடிக்கை வித்தை காண்பிக்கிறார்கள் என்று நாங்கள் சற்று ஸ்மைல் செய்துவிட்டு, இன்னும் என்னதான் நடக்கும் என்று காத்திருந்தோம். அடுத்த சில நிமிடங்களிலேயே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியையும், கே.பி முனிசாமியையும் நான் கட்சியை விட்டு நீக்குகிறேன் என்றும் அவர் அறிவிப்பு விட்டார். ஆஹா இப்போதுதான் உண்மையாகவே தர்மயுத்தம் தொடங்கி இருக்கின்றது என்று எண்ணினோம். அடுத்ததாக தொலைக்காட்சிகளில் கட்சி அலுவலகம் உடைக்கப்பட்டதும், பெரிய பூட்டை கொண்டு சீல் வைத்து விட்டு எதுவாயிருந்தாலும் அரசாங்கத்திடம் பேசிக் கொள்ளுங்கள் என்று நோட்டீசை ஒன்று ஒட்டி விட்டு அதிகாரிகள் நகர்ந்ததையும், பற்றாக்குறையாக தன் கட்சியினரே அடியும் மிதியும் உதையும் வாங்கிய காட்சிகளை கண்ணீரோடு பார்த்துக் கொண்டு வேதனையில் மூழ்கினோம். பின்னர் மாறி மாறி அறிவிப்புகளை எடப்பாடி பழனிச்சாமி வெளிவிட, இதை சலிக்காமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லப்படும் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட ஏதோ போதாத காலம் நடக்கின்றது என்று புரிந்து கொண்டோம். இதை அம்மாவுடைய ஆத்மா ஒருபோதும் மன்னிக்காது என்று நாங்களே மனசை கொண்டிருக்கும் வேளையில் திடீரென ஓ. பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும் தகவல் வந்தது. மிகவும் வருத்தப்பட்டோம். மாறி மாறி கட்சித் தலைவர்கள் அவர் குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். நலம் பெற வலம் பெற வாழ்த்துகிறோம் என்றெல்லாம் முகநூல், ட்விட் நிரம்பி வழிந்தன.
ஆனால் தற்போது அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மூலம் முடிஞ்சு போச்சுன்னு தகவல் வருது உண்மையா? இன்று ஓ பன்னீர்செல்வத்தை இரட்டை அர்த்தத்தில் முகநூலில் பதிவிட்டு இருப்பது மிகவும் வேதனைப்படுத்தக்கூடிய செயலாக இருக்கின்றது. இப்படி எல்லாம் செய்யக் கூடாது தம்பி நாங்கள் எல்லாம் மூத்த அரசியல்வாதிகள் நாகரிகமாக அரசியலை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள் இப்படி செய்யக்கூடாது. இப்படி வார்த்தைகளை பதிவிடுவதற்கு உங்களுக்கு அதிகாரம் யார்? கொடுத்தது,
என்றெல்லாம் நாங்கள் கேள்வி எழுப்பியதற்கு யோவ் பெருசு ஒழுங்கா அமைதியா இரு.., உங்க கால அரசியல் வேற எங்க காலம் அரசியல் வேற.., நம்ம பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அண்ணே ஒரு வார்த்தை சொன்னாரு.., அது என்னன்னு உங்களுக்கு தெரியுமா? நான் பழைய பழனிச்சாமி இல்ல…. இதை நினைவுபடுத்திக்கங்க பெருசு! என்று எங்களுக்கு பதில் வந்தது மிகவும் வேதனையான பதில் தான். வேற வழியில்லாமல் தான் உங்களிடம் குற்றச்சாட்டாகவே வைக்கின்றோம் என்றனர் மூத்தராராக்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சரியான பாதையில் செல்ல வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும் கூட இதை தற்போதைய பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி புரிந்து கொள்ள வேண்டும்.