• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆன்லைன் மூலம் ஆவண எழுத்தர் உரிமம் புதுப்பிக்கும் வசதி..!

Byவிஷா

Nov 28, 2023

தமிழகத்தில் ஆவண எழுத்தர்களின் உரிமம் புதுப்பித்தல் பணிக்கு புதிய ஆன்லைன் வசதியை பதிவுத்துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
தற்போது 5,141 பேர் உரிமம் பெற்ற ஆவண எழுத்தாளர்களாக உள்ள நிலையில் இவர்களின் உரிமம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும். மாவட்ட பதிவாளர்கள் மூலம் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்படும் நிலையில் பதிவுத் துறையில் பல பணியிடங்களுக்கான கட்டணங்கள் ஆன்லைன் முறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆவண எழுத்தர் உரிமம் புதுப்பித்தலில் ரொக்க பரிமாற்றம் இருப்பதை தடுப்பதற்காக பதிவு துறை பத்திரப்பதிவுக்கான இணையதளத்தில் ஆவண எழுத்தர் உரிமம் புதுப்பித்தல் கட்டணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் படி ஆவண எழுத்தர்களை மாவட்ட பதிவாளர்கள் மற்றும் சர்பதிவாளர்கள் அறிவுறுத்த வேண்டுமென்று பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.