• Sun. Apr 28th, 2024

அம்மாவை ஸ்டாலின் பாராட்டியது அரசியல் உள்நோக்கம் உள்ளது.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு…

மக்கள் விரோத திராவிட முன்னேற்றக் கழக அரசிலே முதலமைச்சராக இருக்கிற ஸ்டாலின் புரட்சித்தலைவி அம்மாவை  பாராட்டியது அரசியல் உள்நோக்கம் உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
புரட்சித்தலைவி அம்மாவை, திமுக பழிவாங்குகின்ற நடவடிக்கைகளை ஈடுபட்டதை மறந்து அல்லது மக்கள் அதை மறக்க வேண்டும் என்கிற வகையில் அம்மாவை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி இருக்கிறார். இதை ஆளும்கட்சியாக இருக்கிற முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அம்மாவை கூட பாராட்டினார் என்று பத்திரிகைகள் எல்லாம் அதை பெரிது படுத்திகின்றனர்.
நான் நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன் அம்மாவின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடிஜி  நாடாளுமன்றத்திலேயே ஒரு முன்மாதிரியான திட்டம் என்று மழைநீர் சேகரிப்பு திட்டத்தை பாராட்டினார். அன்னை தெரசா அம்மாவுடைய இல்லம் தேடி வந்து நான் கண்ட கனவை நினைவாக்கிய தொட்டில் குழந்தை திட்டத்தை தந்த நீங்கள் மகராசியாக வாழ வேண்டும் என்று பாராட்டினார். அதுபோல் அமெரிக்காவை சேர்ந்த ஹிலாரிகிளின்டன் சென்னையில் நேரடியாக வந்து பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய அம்மாவை பாராட்டினார் 
இன்றைக்கு ஸ்டாலின் அம்மாவை பாராட்டிய அந்த உள்நோக்கம் நமக்கு புரிகிறது. அம்மா கொண்டு வந்த திட்டமான  இசை பல்கலைக்கழகத்தில் முதலமைச்சராக இருந்து வேந்தராக இருக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தவுடன் மகிழ்ச்சி அடைகிறேன் என்று  ஸ்டாலின் பாராட்டியிருப்பது அரசியல் உள்நோக்கம் உள்ளது. ஏனென்றால் புரட்சித்தலைவி அம்மா மடிக்கண்ணி திட்டத்தை வழங்கினார். இதன் மூலம் 52 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றனர் அந்த திட்டத்தை நிறுத்திவிட்டனர். 2000 அம்மா மினி கிளினிக்கை  நிறுத்திவிட்டனர். அம்மா உணவகத்தை சீரழித்து வருகிறார்கள், தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டனர். அதேபோல் உழைக்கும் பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டத்தை பாரத பிரதமர் அழைத்து எடப்பாடியார் தொடங்கி வைத்த அந்த திட்டத்தையும் நிறுத்திவிட்டனர், கிராமப்புறத்தில் வெண்மை புரட்சி படைக்கும் வண்ணம் கறவை மாடுகள், ஆடுகள் திட்டங்களை அம்மா செயல்படுத்தினார் அதையும் ரத்து செய்துவிட்டனர் இது நியாயமா?
அம்மாவை நீங்கள் பாராட்டுவது அதன் மூலமாக உங்களுக்கு பாராட்டு கிடைக்க வேண்டும் என்கிற அந்த அரசியல் லாப உள்நோக்கத்துடன் தான் நீங்கள் அங்கே பாராட்டியிருக்கிறீர்கள்?
அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அம்மா மீது 28 பொய் வழக்குகளை ஆதாரமில்லாமல் சுமத்தினீர்கள், இதன் மூலம் மக்கள் பணியில் தொய்வு ஏற்படுத்தி விடலாம்  என்று நினைத்தீர்கள் ஆனால் அதிமுக தொண்டர்கள் ஆதரவோடு அம்மா அரசியல் சேவை செய்தார். அது மட்டும் அல்ல அம்மா விடுதலை பெற்ற வழக்கை கூட மேல்முறையீடு செய்து அரசியல் காழ்புணர்ச்சி செய்தீர்கள்? மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே, காந்தி நல்லவர் வாழ்க என்று என்று சொல்வதைப் போல தான் நீங்கள் சொல்வது உள்ளது.
உங்கள் பாராட்டு அம்மாவுடைய திட்டங்களை நிறைவேற்றுகிற போது தான் அது உண்மையானதாக இருக்கும், இல்லை என்றால் இது வேசமாகத்தான் இருக்கும். அம்மாவின் திருப்பெயரால் புரட்சித்தமிழர் எடப்பாடியார் திட்டங்களை திறந்து வைத்தாரே அதை  போல செய்து காட்டுங்கள். ஆனால் அம்மாவின் திட்டங்களை நீங்கள் செயல்படுத்தாமல், அம்மா செய்த  திட்டங்களால் இந்த நாட்டு மக்கள் வளர்ச்சி பெற்றார்களே அதை மறைக்க,  அம்மாவின் புகழை நீங்கள் தடுத்து நிறுத்தி விடலாம் என்று நினைத்தால் அது  முட்டாள்தனமாக இருக்கும்.
அம்மாவின் புகழை இந்த உலகம் பேசுகிறது, நாடு முழுவதும் புரட்சித்தலைவி அம்மா புகழ், மங்கா புகழாக இந்த வையகம் உள்ளவரை  நீடித்த புகழ் நிலைத்திருக்கும், அதை எவராலும் அசைத்துப் பார்க்க முடியாது. ஒரு சாமானிய தொண்டனாக கழகத்தை கட்டிக் காத்து வரும் எடப்பாடியாரின் தலைமையில் அம்மாவின் புகழை மங்கா புகழாக, நீடித்த புகழாக, நிலைத்த புகழாக, உருவாக்கிட உயிரை கொடுப்பதற்கு கோடான கோடி தொண்டர்கள் களத்தில் இருக்கிறார்கள் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *