• Sun. Jun 28th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

திமுக சார்பில் பாஜக அதிமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

ByKalamegam Viswanathan

Feb 13, 2026

மதுரை தெற்கு மாவட்டம் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக சார்பில் விக்கிரமங்கலம் கனரா வங்கி முன்பு தமிழகத்திற்கு நிதி வழங்காத ஒன்றிய பாஜக துணைபோகும் அதிமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகரன் தலைமை தாங்கினார் மாவட்டத் துணைச் செயலாளர் சிவனாண்டி விவசாய அணி மோகன் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூக்கன் வரவேற்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் தவமணி பாண்டி பொருளாளர் பாஸ்கரன் மகளிர் அணி சங்கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு துணை போகும் அதிமுகவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது செல்லம்பட்டி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் பெண்கள் உட்பட்ட ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.

இதேபோல் மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மற்றும் சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் தமிழகத்திற்கு நிதி வழங்காத ஒன்றிய பாஜக மற்றும் அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சோழவந்தான் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை தாங்கினார்.

வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் சி பிஆர் சரவணன் விவசாய அணி வக்கீல் முருகன் முள்ளிபள்ளம் ஊராட்சி செயலாளர் கேபிள் ராஜாஆகியோர் முன்னிலை வகித்தனர். சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் பேரூர் துணைச் செயலாளர்கள் கொத்தாலம் செந்தில் வேல் ஸ்டாலின் மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி சுரேஷ் பொருளாளர் கண்ணன் அவைத் தலைவர் தீர்த்தம் என்று ராமன் முன்னாள் பேரூர் செயலாளர் முனியாண்டி இளைஞர் அணி வெற்றி செல்வன் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஈஸ்வரி ஸ்டாலின் முத்து செல்வி சதீஷ் சிவா மருதுபாண்டி குருசாமி செல்வராணி நிஷா கௌதம ராஜா வார்டு நிர்வாகிகள் ரவி விவசாய அணி சங்கங் கோட்டை சந்திரன் தொமுச செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் எஸ் ஆர் சரவணன் செங்குட்டுவன் ஒன்றிய பிரதிநிதி ராமநாதன் கண்ணதாசன் முட்டை கடை காளி மணிப் பாண்டி நூலகர் ஆறுமுகம் சபாபதி கேபிள் தமிழ் மணிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.