• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் மகளிர் உரிமை தொகை 5 ஆயிரம் வரவு; திமுக நிர்வாகிகள் கொண்டாட்டம்..,

ByP.Thangapandi

Feb 13, 2026

உசிலம்பட்டியில் மகளிர் உரிமை தொகை 5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டதையடுத்து திமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.,

இன்று காலை மகளிர் உரிமை தொகை பெறும் மகளிர்களின் வங்கி கணக்கிற்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான தொகையான 3000 முன் தொகையாகவும், கோடைகால தொகையாக 2000 என சுமார் 5000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது.,

தொடர்ந்து மகளிர் உரிமை தொகையை மாதம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.,

இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு, உசிலம்பட்டி திமுக நகர செயலாளர் தங்கபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அஜித்பாண்டி, முருகன், பழனி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இணைந்து பட்டாசு வெடித்தும், மகளிர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.