

பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா, ஜெயந்தி விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக, எம்எல்ஏக்கள் மலர்வளையம் வைத்தும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் பிள்ளையார் பட்டி குருக்களின் யாகசாலை பூஜையுடன் முத்துராமலிங்கத்தேவரின் 114வது ஜெயந்தி விழா மற்றும் 59 குருபூஜை விழாவை நேற்று முன்தினம் தொடங்கியது.
இதையடுத்து திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன், போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள் திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
