• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

திமுக தாவிய அதிமுக கவுன்சிலர்கள் .. அடுத்த செக் ராஜவர்மன் !Arasiyal today in Exclusive Audio

சிவகாசி முழுவதும் பட்டாசு போல பரபரப்பாக பேசிட்டு இருக்கிற விஷயமே அதிமுக கவுன்சிலர்கள் 9 பேரையும் திமுக தட்டி தூக்கியது குறித்து தான் இது குறித்து விருதுநகர் அதிமுகவினர் புலம்பி தவித்து வருகின்றனர்.
நல்லா தான் பிரச்சாரம் பண்ணாங்க .. ஜெயிச்சாங்க என்ன தான் பிரச்னை நடந்துச்சு பார்க்கலாம்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புது அவதாராம் எடுத்து என்ன என்ன அட்வைஸ் கொடுக்கணுமோ எல்லாம் கொடுத்து வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிச்சு ஜெயிக்க வச்சாரு. நீங்க என்னடான்னா, உங்க பேராசைக்காக அப்ப கட்சி மாறுனீங்க. இப்ப எந்த முகத்த வச்சு ஓட்டு கேட்டு வர்றீங்க?’ முகத்துக்கு நேரா இப்படி கேட்டாங்கன்னா, இந்த 9 கவுன்சிலர்களும் எப்படி வாயைத் திறக்கமுடியும்?’ என விருதுநகர் முழுவதும் அதிமுகவினருடைய உள்ளக்குமுறல் இது தான்.
‘அதெப்படி போன 10 வருஷம் அதிமுகவுல சம்பாதிச்சிட்டு, அடுத்த 5 வருஷம் திமுகவுலயும் சம்பாதிக்கணும்னு கணக்கு போட்டு கட்சி தாவுறாங்க?
ராஜேந்திரபாலாஜிய விரட்டி விரட்டி அரெஸ்ட் பண்ணுன வழக்குல புகார் கொடுத்த விஜயநல்லதம்பி, பலராமனின் 10 ஆண்டுகளுக்கு முந்தைய பிந்தைய சொத்துகளை ஆய்வு செய்தாலே உண்மை வெளிப்படும்.’ என்று குற்றம் சாட்டியிருந்தார். பலராமன் தற்போது திமுகவில் சேர்ந்துவிட்டார்.

9 மாநகராட்சி கவுன்சிலர்களோடு இணைந்த பலராமனைக் காப்பாற்ற திமுக அரசு உதவினால், ராஜேந்திரபாலாஜி மீதான வழக்கு ஒண்ணுமில்லாம போயிருமே! இன்னைக்கு வரைக்கும் அந்த வழக்குல பலராமன் நிரந்தர ஜாமீன் வாங்கல. கோர்ட்டிலும் ஜாமீன் ஏறல. ஆனா, ரெண்டு அமைச்சர் முன்னால தைரியமா நின்னு ஆளும்கட்சில சேர்ந்துட்டேன்னு போட்டோ எடுத்துக்க முடியுது. இந்த விவரமெல்லாம் திமுக தலைமைக்கு தெரியுமா?


இந்த பலராமன் லேசு பட்ட ஆளு இல்ல,.இவருக்கு சொந்தமா பல்லடத்தில் ரூ.300 கோடி பெறுமான மில் இருக்கு. மூணு ஷிப்ட் வேலை நடக்கு. பலராமனின் கோடிக்கணக்கான பணம் பினாமிகளின் பெயரில் சிவகாசி பட்டாசு நிறுவனங்கள்ல புரளுது. இவ்வளவு சம்பாத்தியம் எப்படி வந்துச்சுன்னு, ராஜேந்திரபாலாஜி மேல உள்ள கோபத்துல பலராமன் பக்கம் திரும்பிடக்கூடாதுன்னுதான் பாதுகாப்பு தேடி திமுகவுக்கு போயிட்டாரு.

கூண்டோடு கட்சி தாவ வச்சதுல லெனின் கிருஷ்ணமூர்த்தியோட பங்கு நெறய இருக்கு. பலராமன், லெனின் கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன் அப்புறம் மாவட்ட திமுக இளைஞரணி பொறுப்புல இருந்த கே.வி.கந்தசாமி.. இந்த நாலு பேர் விரிச்ச வலையில, திருத்தங்கல் அதிமுக ந.செ. பொன் சக்திவேல் சிக்கிட்டாரு.
அதிமுகவை விட்டுப்போக மனசே இல்லாம, உள்ளுக்குள்ள அழுதுகிட்டேதான் போயிருக்காரு பொன் சக்திவேல். ராஜேந்திரபாலாஜி மாதிரியே உன்னையும் விடமாட்டாங்கன்னு மிரட்டியே பொன் சக்திவேலை கூட்டிட்டு போயிட்டாங்க.
இதே ,மாதிரி அடுத்த டார்கெட் ராஜவர்மன் தான்னு ஒரு பேச்சு ஓடிட்டு இருக்கு. மார்.7 தேதி பெரும்படையோட திமுகவிற்கு தாவ இருக்காருன்னு கிட்ட தட்ட கன்பார்ம் ஆகிடுச்சுனு திமுக வட்டாரத்தில் பேச்சு வந்துட்டு இருக்கு. இது எந்த அளவுக்கு உண்மைனு விசாரிக்க அரசியல் டுடே அதிமுகவை சேர்ந்த ராஜவர்மனை தொலைபேசி வாயிலாக அணுகிய போது…
(நம்மிடம் பேசிய முன்னாள் சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜவர்மன் .., இங்க பாருங்க நானே கல்யாணம் வேலையில பிசியா இருக்கிறேன். நானும் அண்ணன் ராஜேந்திர பாலாஜியும் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் பேசுறோம். நேத்து நைட்டு வரைக்கும் அவர் கூட பேசிட்டு தான் இருந்துட்டு வரேன். அப்படி இருக்கும் போது நான் எதுக்கு திமுகவிற்கு போகணும். அமமுகவிற்கு போயிட்டு திரும்ப வரும் போது கூட தாய் கழகமான அதிமுகவிற்கு தான் வந்தேன், இல்லைனா சீட் கேட்டு திமுகவிற்கு போக தெரியாதா ராஜேந்திரபாலாஜி அண்ணனின் உண்மை விசுவாசிநான் . அந்த ஒன்பது பேர் ஏன் போனாங்கன்னு நீங்க ராஜேந்திர பாலாஜி கிட்ட தான் கேட்கனும். என கூறினார்.)
ராஜவர்மன் பேசியதை கேட்கும் போது இவர் திமுகவிற்கு போக மாட்டார் போல என்று தான் தோன்றுகிறது.ஆனால் எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.